Why are Patta Chitta document so important for land
பட்டா சிட்டா ஆவணங்கள் ஏன் நிலத்திற்கு மிக முக்கியமானது..!
நீங்கள் நிலம் வைத்திருக்கக்கூடிய நபராக இருந்தால் நிச்சயம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்..!
நம் நாட்டில் மத்திய மாநில அரசுகள் விவசாய நிலங்களுக்கு மானியம் வழங்குகிறது அவைகள் பட்டா சிட்டா அடிப்படையில் தான் வழங்குகிறது பட்டா என்பது ஒரு நபரின் நிலத்தை பற்றிய தகவல்களை உள்ளடக்கியது.
பத்திரப்பதிவு செய்தவுடன் உங்கள் நிலத்திற்கான பாட்டா சிட்டா ஆவணம் தயாராகிவிடும் அந்த வகையில் சிட்டா என்றால் என்ன?சிட்டாவின் முக்கியத்துவம் என்ன ஏன் நிலத்திற்கு சிட்டா மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
இணையதளத்தில் இவைகளை எப்படி பெறுவது என்பதை பற்றி முழுமையாக காணலாம் நம் நாட்டில் சொத்துக்கள் வைத்திருப்பவர் கட்டாயம் பட்டா சிட்டா போன்ற ஆவணங்கள் தேவை.
உங்களுடைய நிலத்திற்கான பட்டாவில் ஏற்கனவே சில அடிப்படை தகவல்கள் இருக்கும் இருந்தாலும் சில கூடுதல் தகவல்கள் சேர்த்து இடம்பெறுவது தான் சிட்டா.
குறிப்பாக உங்களுடைய நிலம் எங்கு உள்ளது அதனுடைய அளவுகள் என்ன நிலம் சம்பந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடக்கியது தமிழ்நாட்டில் உங்களோடு நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளது எந்த வட்டத்தில் உள்ளது.
எந்த கிராம பஞ்சாயத்தில் உள்ளது, எந்த கிராமத்தில், எந்த புல எண் மற்றும் சர்வே எண்ணில் இருக்கிறது நஞ்சை நிலமா? புன்செய் நிலமா? நிலத்திற்கு எத்தனை நபர்கள் உரிமையாக உள்ளார்கள் போன்ற அடிப்படை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது.
ஏன் சிட்டா மிக அவசியமாக தேவைப்படுகிறது..!
அந்த நிலத்தை பற்றி சுருக்கமாக தெரிவிப்பது தான் சிட்டா அந்த நிலம் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது சிட்டா நிலம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது.
உங்களுடைய நிலத்திற்கு பட்டாவை போலவே சிட்டா ஆவணங்களும் அவசியமாகும் உதாரணத்திற்கு நீங்கள் வங்கிகள் மூலம் கடன் வாங்க வேண்டும் என்றால் சொத்தின் பெயரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
நிலத்தின் உரிமை நிலத்தின் அளவு நிலம் அமைந்துள்ள இடம் போன்றவற்றை வைத்து தான் வங்கி அந்த நிலத்திற்கான கடன் ஒதுக்கீடு செய்யும்.
கட்டாயம் சிட்டா உங்களுடைய நிலத்திற்கு தேவை..!
மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை விவசாய நிலங்களுக்கு வழங்குகிறது குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு வருடத்திற்கு 6,000/- ரூபாய் வழங்குகிறது.
விவசாய நிலம் மற்றும் விவசாயம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்படைந்த நிலம், நிலத்தினை அரசு பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்டது, அதற்கான இழுப்பீட்டு தொகை பெறுவதற்காகவும் பட்டா சிட்டா மிக முக்கியமாக தேவைப்படுகிறது.
அதே போல ஒரு விவசாய நிலத்தினை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தினை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் பட்டா மிக முக்கியமாக தேவைப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து பட்டா சிட்டா இரண்டும் ஒரே ஆவணமாக இணைக்கப்பட்டுவிட்டது பட்டா சிட்டாவில் இருக்கக்கூடிய அனைத்து தகவல்களும் தற்போது.
ஒரே ஆவணத்தில் கிடைக்கிறது நீங்கள் இணையதளத்தில் இதனை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்.
நிலம் வாங்கும் போது விற்பனை செய்யும் போது மிக கவனம் தேவை..!
நீங்கள் ஒரு நிலத்தை வாங்க விருப்பப்பட்டால் அந்த நிலம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டங்களில் சொத்தில் பெண்களுக்கு சம பங்கு என்பதால் நிலத்திற்கு எத்தனை உரிமையாளர்கள் உள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் ஒரு நிலத்தை நீங்கள் வாங்க விருப்பப்பட்டால்.
அந்த நிலம் சம்பந்தமான வில்லங்க சான்றிதழை பதிவிறக்கம் செய்து அந்த நிலத்திற்கு எத்தனை நபர்கள் உரிமையாளர்களாக உள்ளார்கள் நன்செய் நிலமா? புன்செய் நிலமா? நிலத்திற்கு என்ன வகை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
போன்ற அடிப்படை தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் கோயில் நிலம், அரசு புறம்போக்கு நிலம், வெளிநாட்டில் இருக்கக்கூடிய நபர்களின் நிலம், சொத்தில் பங்கு உள்ள நிலம் போன்ற பல்வேறு வகையான நிலங்கள் இருக்கிறது.
UPI மூலம் பணப் பரிமாற்றத்திற்கு 5% GST விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது..!
சில நபர்கள் மற்றவர்களுடைய நிலத்தினை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள் இதனால் நீங்கள் உங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்கு நிலம் வாங்க வேண்டும் என்றால் அந்த நிலத்திற்கான வில்லங்கச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து.
வழக்கறிஞரிடம் கொடுத்து அந்த நிலத்தில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு நிலம் வாங்குங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |