TNPSC Group 4 Exam 3935 vacancies available for application from today
TNPSC Group 4 தேர்வு 3935 காலிப்பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது இதற்கு முன்பு குரூப்-1 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்று குரூப்-4 தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த ஆண்டு காலிபணியிடங்கள் மிக குறைவாக இருக்கிறது 3935 என்பது சற்று இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஒவ்வொரு ஆண்டும் இந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மூலம்.
நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைந்தது 8000 முதல் 10 ஆயிரம் வரை இருக்கும்,ஆனால் 2025 ஆம் ஆண்டு மிகக் குறைவு என்பதால் இளைஞர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அடுத்த ஆண்டு அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறாத சூழ்நிலை இருக்கிறது நிச்சயம் இது இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இன்று முதல் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 12-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது மொத்தம் 3935 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பி வருகிறது.
அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது ஜூலை 12ஆம் தேதி 9:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்த தேர்வு நடைபெறும்.
தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் தேர்வாளர்கள் TNPSC இணையதளத்தில் உள்ள ஒரு முறை பதிவு தளத்தில் பதிவு செய்ததும்,இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் ஏற்கனவே ஒரு முறை பதிவு செய்திருப்பின் அவர்கள் இந்த தேர்வுக்கான,இணைய வழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்ய தொடங்கலாம்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
தேர்வு அறைக்குள் தொலைபேசி கால்குலேட்டர்,ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுவரக்கூடாது அதேபோல் ப்ளூடூத் கருவியையும் கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகள் வைத்திருப்பர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் அவர்களுடைய விடைத்தாள்கள் செல்லாதக்கதாக்க அறிவிக்கப்படும் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும்.
தேர்வு எழுதுவதில் விழக்குவைக்கப்படும் அந்த இடத்தில் சோதனை செய்யப்படுவார்கள் தேர்வுகள் அவர்களின் சொந்த நலன் கருதி கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு எடுத்து வர வேண்டாம் என அறிவித்தவுடன், அப்பொருளின் பாதுகாப்பிற்கு TNPSC பொறுப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் குறித்த முழு தகவல்கள்
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 215
இளநிலை உதவியாளர் பணிக்கு 1621
இளநிலை உதவியாளர் பினையம் 46
தட்டச்சர் பணிக்கு 1099
சுருக்கெழுத்து பணிக்கு 35
நேர்முக எழுத்தாளர் பணிக்கு 2
வனக்காப்பாளர் பணிக்கு 35
வனகாவலர் பணிக்கு 50
என மொத்தம் 3935 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
இந்த தேர்வுகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்புக்கு படித்திருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.
தேர்வாளர்கள் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்கள் தேர்வு எழுதலாம் எந்தெந்த மாவட்டங்களில் தேர்வு மையம் இருக்கிறது என்பதை அறிவிக்கையில் 29 மற்றும் 30 பக்கங்களில் இருக்கிறது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |