ஒரே ஆட்சியில் இரண்டு முறை செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது ஊழல் வழக்குக்காக..!Senthil Balaji and Ponmudi stripped of ministerial posts

Senthil Balaji and Ponmudi stripped of ministerial posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஒரே ஆட்சியில் இரண்டு முறை செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது ஊழல் வழக்குக்காக.

அதேபோன்று பொன்முடி பல்வேறு ஆபாச பேச்சுக்களால் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் திமுக அமைச்சர்கள் இந்து மக்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் பணத்தை வாங்கிக் கொண்டு பணியிடத்திற்கு தகுதியில்லாத நபர்களை அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது இதை நீதிமன்றத்தில் அவரும் ஒப்புக்கொண்டு உள்ளார்.

இந்த வழக்கு விசாரணை என்பது இந்தியா முழுவதும் பரவலாக உற்று நோக்கப்படுகிறது ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 500 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளார் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் 48 மணி நேரத்தில் மீண்டும் அமைச்சர் பதவி பெற்றார்.

அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தார் இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அப்போது நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமலாக்கத்துறை முன்வைத்த வாதம் என்பது இவர் ஜாமினிலிருந்து வெளியில் வந்தவுடன் 48 மணி நேரத்தில் இரண்டு துறைகளுக்கு அமைச்சர் பதவி பெற்றுள்ளார் அதிகாரம் மிக்க நபராக இருப்பதால் எளிமையாக சாட்சிகளை கலைத்து விடுவார் என் தங்களுடைய வாதங்களை முன் வைத்தார்கள்.

செந்தில் பாலாஜியிடம் இது பற்றிய கருத்து கேட்டதற்கு ஜாமினில் வெளிவந்த பிறகு அமைச்சர் பதிவில் இருப்பதில் என்னுடைய உரிமை எனக்கு தெரிவித்தது நீதிமன்றத்திற்கு கடுமையான போராட்டத்தை ஏற்படுத்தியது கடந்த புதன்கிழமை நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி திங்கட்கிழமை உங்களுக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை தெரிவிக்க வேண்டும் ஜாமீன் வேண்டுமென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.

அமைச்சர் பதவி வேண்டும் என்றால் உங்களுடைய ஜாமினை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது அன்றைய தினமே சிறைக்கு செல்லுங்கள் என உத்தரவிட்டது.

இது திமுக மற்றும் செந்தில்பாலாஜிக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தியது வேறு வழியில்லாமல் தற்போது ராஜினாமா செய்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இருந்து தமிழக அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி மற்றும் கே.பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் ராஜ்பவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அவர்களின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ்பவன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்ளும்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகாவிட்டால் ஜாமீனை ரத்து செய்வதாக எச்சரித்ததால் பதவிக்கும் சுதந்திரத்திற்கும் இடையே தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

ஒரு பாலியல் தொழிலாளியின் பின்னணியில் ஷைவ-வைஷ்ணவ கருத்துக்களால் பொன்முடி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார், இது பரவலான விமர்சனங்களை ஈர்த்தது, இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பின்னர் தன்னிச்சையாக.

நடவடிக்கைகளைத் தொடங்கியது கட்சியின் முக்கிய பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பிற தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

செந்தில் பாலாஜி வசம் உள்ள மின் துறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கையாள்வார் மேலும், வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கலால் மற்றும் மதுவிலக்கு ஒதுக்கப்பட்டு, செந்தில் பாலாஜியும் ஒதுக்கியுள்ளார்.

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு தற்போதுள்ள பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறைக்கு கூடுதலாக பொன்முடியின் காடுகள் மற்றும் காதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதித்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன்..!

மேலும் பத்மநாபபுரம் எம்எல்ஏ டி மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க முதல்வரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையின் முந்தைய மறுசீரமைப்பில் அவர் கைவிடப்பட்டார் அமைச்சரின் பதவிப்பிரமாணம் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATAPP CLICKHERE
TELEGRAM CLICKHERE

Leave a Comment