Pakistan takes urgent steps to secure medicines as trade with India halts
அவசரப்பட்டு வர்த்தக தடை இந்தியாவில் இருந்துதான் 40 சதவீத மருந்துகள் பாகிஸ்தானுக்கு செல்கிறது மருந்து பற்றாக்குறையால் திணறுகிறது..!
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் தற்போது நிச்சயம் மிகப்பெரிய மோதல்கள் ஏற்படும் என்ற சூழ்நிலை இருக்கிறது,காஷ்மீரில் பல்கம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரை வரலாற்றில் எடுக்காத நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதை பாகிஸ்தானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை இது தொடர்பாக எந்த ஒரு நாடும் இந்தியாவிற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
நதிநீரை நிறுத்தியது தவறு என்று ஒரு வார்த்தை கூட அறிக்கை வெளியிடவில்லை இது பாகிஸ்தானுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாய், சவுதி அரேபியா, கத்தார், ஈரான், போன்ற அரபு நாடுகள் கூட இந்தியாவிற்கு நதிநரிநீர் ஒப்பந்தம் தடை செய்ததை பற்றி எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் மலேசியா இந்த முறை வாய் திறக்கவில்லை.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினால் மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்பதை அந்த நாடு உணர்ந்து கொண்டது ஏற்கனவே காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கியதை அந்த நாடு விமர்சனம் செய்தது.
இந்தியா உடனடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு தடை விதித்தது மலேசியாவின் பாமாயில் 90% இந்தியாவிற்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது இதனால் அந்த நாட்டில் கடுமையான.
பொருளாதார நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டது அதன் பிறகு அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது எந்த ஒரு நாடும் தற்போது இந்தியாவிற்கு கண்டனங்கள் அல்லது தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய பயன்படுகிறார்கள்.
உலகில் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு அதிகமான வர்த்தகம் நடைபெறும் நாடு என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் கூட தங்கள் நாட்டிடம் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று குரல் கொடுக்கிறார்கள்.
சீனா இப்பொழுது வாய் திறக்காமல் இருக்கிறது அமெரிக்காவுக்கு சீனாக்கும் வர்த்தக போர் இருப்பதால் சீனாவிற்கு நிச்சயம் இந்தியாவின் ஆதரவு தேவைப்படுவதால் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவும்.
செயல்படாமல் இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது தற்போது பாகிஸ்தான் உலகில் தனித்து விடப்பட்ட நாடாக இருக்கிறது யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை,நிச்சயம் கற்பனை செய்ய முடியாத பயங்கரமான தாக்குதலை சந்திக்க நேரிடும் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருந்து பற்றாக்குறையால் அலறும் பாகிஸ்தான்
இந்த நிலையில் இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு விட்டது ஆனால் ஒன்றை பாகிஸ்தான் மறந்துவிட்டது.
உலகிற்கு அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்வது இந்தியா தான் பாகிஸ்தானுக்கும் 40 சதவீத மருந்துகளை ஏற்றுமதி செய்வது இந்தியா தான் தற்போது 40 சதவீத மருந்துகள் தடை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
இதனால் வேறு வழியில் மருந்தை கொண்டு வருவதற்கு தீவிரமான ஆலோசனை மேற்கொண்டு வருகிறது தற்போது அங்குதான் புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது இந்தியாவிலிருந்து 40 சதவீதம் மருந்துகள் வருவது நின்று விட்டால்.
துபாய், ரஷ்யா,ஈரான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போலியான மருந்துகள் பாகிஸ்தானில் அதிகமாக குவியம் இதனால் நோயாளிகளுக்கு சரியான மருந்து வழங்க முடியாத சூழ்நிலைகளை ஏற்பட்டு.
நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் இதை உணர்ந்து கொண்டு தற்போது எப்படி இந்த நிலைமையை சமாளிக்க முடியும் என்பதை பாகிஸ்தான் யோசித்து வருகிறது.
முக்கியமான மருந்துகள் என்ன
ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள், பாம்பு விஷக்கடி எதிர்ப்பு, புற்றுநோய் சிகிச்சைகள், ஆன்ட்டிபாடிகள் மற்றும் பிற முக்கியமான உயிரியல் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியம் மருந்து பொருட்கள் இந்தியாவில் இருந்துதான் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
பாகிஸ்தான் தனது மருந்து தேவைகளுக்கு சுமார் 40 சதவீதத்தை இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது மிக முக்கியமாக புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சை, தடுப்பூசிகள் மற்றும் சீராம் குறிப்பாக ரேபிஸ் எதிர்த்து தடுப்பூசி பாம்பு விஷ எதிர்ப்பு ஆகியவற்ற இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது.
அனைத்து வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்த நிலையில் மருந்து பொருட்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் பாகிஸ்தான் அரசு அறிவிக்கவில்லை மருந்து விநியோக சங்கிலியில் ஏற்படும் இடையூறு.
அடுத்த 7 நாட்களுக்கான முழுமையான வார பலன்களைப் பார்க்கும்போது..!
கடுமையான பற்றாக்குறைக்கு வழி வகுக்கும் என அந்த நாட்டில் சுகாதாரத்துறை தற்போது தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது அங்கீகரிக்கபடாத மருந்துகள் ஆப்கானிஸ்தான்,ஈரான்,துபாய் மற்றும் கிழக்கு எல்லை வழியாக.
பாகிஸ்தானுக்குள் கடத்தப்படும் ஒரு கருப்பு சந்தை மிகப்பெரிய அளவில் உருவாகினால் மக்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் சுகாதாரத்துறை தற்போது பயந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |