Pakistan Army on high alert for India to attack at any time
எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நடத்தும் உடனடியாக அனைவரும் வெளியேற வேண்டும் பாகிஸ்தானில் என்ன நடக்கிறது..!
ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் மற்றும் 12 நபர்கள் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது நாட்டையே உலுக்கி உள்ளது அமெரிக்காவின் துணை அதிபர் இந்தியா வந்துள்ள நேரம்,இந்தியாவில் IPL கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற வருகிறது, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணம் சென்றுள்ளார் மற்றும் நிர்மலா சீதாராமன் அமெரிக்க சென்றுள்ளார்.
இதுபோன்ற மிக முக்கியமான நேரத்தில் தீவிரவாத தாக்குதல் என்பது நாட்டையே உலுக்கியுள்ளது,27 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டார்கள் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி.
தன்னுடைய பயணத்தை தடை செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்பினார்,டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார் மேலும் தன்னுடைய வீட்டில் முப்படை.
தளபதிகளுடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார் இதன் காரணமாக நிரந்தரமாக பாகிஸ்தானில் இருக்கும்.
இந்திய தூதரகத்தை மூடி விடலாம் மற்றும் டெல்லியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தையும் மூடிவிடலாம் என்ற கருத்து வெளியிடப்பட்டது,இது குறித்து செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.
அதிரடியான நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தான்
2019 ஆம் ஆண்டு காஷ்மீர் புல்மாவில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நாட்டை உலுக்கியது,இதனால் உடனடியாக பதிலடி கொடுத்த இந்தியா 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.
தீவிரவாதிகளின் கூடாரம் அழிக்கப்பட்டது இந்த தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளின் நடவடிக்கை என்பது காஷ்மீரில் குறைந்தது இந்திய அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி தொடர்ந்து தீவிரவாதிகளை கண்காணித்து வந்தது.
மீண்டும் அதிரடியான தாக்குதல் இங்கே நடத்தும்
தற்போது 27 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகிறது,தன்னுடைய வான் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது எல்லையோர இருக்கும் கிராம மக்களை போர்க்கள அடிப்படையில் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளது நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எப்பொழுது பதிலடி கொடுக்கும் எப்படி பதிலடி கொடுக்கும் என்று தெரியாமல் பாகிஸ்தான் இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி வெளியிட்டுள்ள கருத்து
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவ தளபதி இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது என்ற கருத்தை முன் வைத்தார் தற்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நீங்கள் இஸ்லாமியர்களா இந்துக்களா என்று கேட்டறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
அதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளிவந்துள்ளது இது நாட்டின் உளவுத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.
நிச்சயம் கடுமையான பதிலடியை இந்தியா கொடுக்கும்
இந்தியாவிடம் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கிறது இந்தியா போர் தொடுத்தாலும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது அனைத்து எல்லை பரப்புகளிலும் பாகிஸ்தான் கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான், ஈரானுடன் தொடர்ந்து சண்டையில் இருக்கிறது தற்போது இந்தியா அதிரடியான நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது பாகிஸ்தான் ஏற்கனவே உள்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை.
சந்தித்து வருகிறது பாகிஸ்தான்,தற்போது மிகப்பெரிய தாக்குதலை இந்திய நடத்தினால் உலக நாடுகள் இந்தியாவிற்கு தான் ஆதரவு கொடுப்பார்கள் என்பதில் பாகிஸ்தான் உணர்ந்து கொண்டது.
அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் நிச்சயம் இந்தியாவிற்கு தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நாடு முழுவதும் உடனடியாக பதிலடி தாக்குதல் தொடங்குங்கள் என்ற குரல் வலுத்துள்ளது சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள்கள், youtube சேனல்கள், என அனைத்து பக்கங்களிலும் உடனடியாக பதிலடி தாக்குதல் கொடுக்க வேண்டும்,தீவிரவாதிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.
ராணுவ நடவடிக்கையில் என்ன நடந்தது
இன்று ராணுவம் அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டது அதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அவர்களுடைய ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனினும் தாக்குதல் நடத்திய.
தீவிரவாதிகளின் புகைப்படங்கள் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது 25 வயதிற்குள் இருக்கும் நபர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக இறங்கி உள்ளது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |