இந்தியாவை உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்..!Donald Trump assures US will not intervene if India and Pakistan clash

Donald Trump assures US will not intervene if India and Pakistan clash

இந்தியாவை உலுக்கிய பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் நகருக்குச் செல்லும்.

வழியில் டிரம்பின் பதில் வந்தது. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமடைந்தது குறித்து செய்தியாளர்கள் குறிப்பிடுகையில் அவர் பதிலளித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கவே கூடாது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன இரு நாடுகளும் பரஸ்பர காரணங்களை மதிப்பீடு செய்து மோதல்களைத் தீர்க்க வேண்டும்.

காஷ்மீர் தொடர்பான சண்டை பல ஆண்டுகள் பழமையானது இப்போது நடந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான தாக்குதல் என்று டிரம் மேற்கோள் காட்டி மோதலில் தலையிட மாட்டேன் என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

எல்லைகளில் 1,500 ஆண்டுகளாக மோதல்கள் உள்ளன இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை எனக்கு நெருக்கமாக தெரியும் இந்த மோதல்கள் ஒருவழியாக தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நாட்டையே உலுக்கிய தீவிரவாத தாக்குதல் நடந்தது 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் பலியானவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன.

கற்பனை செய்ய முடியாத கடுமையான பதிலடி இருக்கும் பிரதமர் மோடி

தூதரக மட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக முடக்குவது மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களையும் வெளியேற்றுவது உள்ளிட்ட பழிவாங்கும்.

நடவடிக்கைகள் தொடர்கின்றன பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது இந்திய ராணுவத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் ஆத்திரமூட்டல் மோதல் அபாயத்தை அதிகரித்து வருகிறது.

இந்த மோதலை அடுத்து பாகிஸ்தானில் வசிக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது இதற்கிடையில் இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தான்.

இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது மற்றும் அதன் வான்வெளியை மூடியது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதற்கு பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்தது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டில் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.

நிச்சயம் மிகப்பெரிய மோதல் இருக்கும்

இந்த முறை இந்தியா பாகிஸ்தானை நான்கு பக்கம் கடுமையாக தாக்குதல் நடத்தும் என கணிக்கப்பட்ட உள்ளது கடல் பக்கம், தரை, ஆகாயம் மற்றும் நீர் என அனைத்து பக்கங்களிலும் கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என உறுதியாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது மே 1ம் தேதிக்குள் பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில்.

பிஜேபி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கும் செல்லும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது மற்றும் வருங்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்கக்கூடாது எனவும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

திமுகவின் 5 அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி கொண்டு உள்ளதால் தேர்தல் நேரத்தில்..!

அதற்கு ஏற்ப நீண்ட தொலைநோக்கு பார்வையுடன் தற்போது மத்திய அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை முழுமையாக தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இனி வரும் காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வைத்து தாக்குதல் நடத்தினால்.

ஒரு சொட்டு நீர் கூட செல்ல முடியாத வகையில் இந்தியா பலப்படுத்தும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இனியும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் போர் என்றால் முதலில் நீர் தான் என உறுதியாக சொல்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

JOIN OUR GROUPS

WHATAPP CLICKHERE
TELEGRAM CLICKHERE

Leave a Comment