Court expressed its strong condemnation against Minister Ponmudi
திமுக என்றால் எப்பொழுதும் ஆபாச பேச்சாளர்களுக்கு இடம் அதிகமாக கொடுக்கும்..!
திமுகவின் முக்கிய ஆபாச பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றம் இவரை பலமுறை கண்டித்து உள்ளது சிறைக்கு சென்றுள்ளார் இருந்தாலும் இவர் தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார்.
திமுகவில் 4ம் கட்ட தலைவர்கள் மற்றும் 5ம் கட்ட தலைவர்கள் ஆபாசமாக பேசக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள்,ஆனால் திமுகவில் முக்கிய நபராக இருக்கும் பொன்முடி அவர்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
பெண்களுக்கு விடியல் பேருந்து பயணம் என்று திமுக அரசு தொடங்கிய திட்டத்தை பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று பேசிய பேச்சு கடுமையான எதிர்ப்பை திமுகவிற்கு ஏற்படுத்தியது.
அதன் பிறகு பொது மேடையில் ஒரு பெண்ணை பார்த்து நீ அந்த ஜாதி பெண் தானே என்ற கேட்ட கேள்வி தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதன் பிறகு பெரியார் குழுக்கள் நடத்திய மேடையில் வைணவம் சைவம் என்று ஆபாசமான பேச்சு.
உச்சகட்ட கோபத்தை தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தியது, தொடர்ந்து திமுகவில் இந்துக்களுக்கு எதிராக ஆபாசமாக பேசி வருகிறார்கள் இந்து மதத்திற்கு எதிராக ஆபாச கருத்துக்களை பதிவிடுகிறார்கள் என தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
தொடர்ந்து வழக்கு பதிவு உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பொன்முடி மீது ஒரே வழக்கு பதிவு செய்யுங்கள் 4 அல்லது 5 வழக்கு பதிவு செய்தால் வழக்கு நீர்த்துப் போய்விடும் என தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தது.
பொன்முடி தற்போது திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அதாவது திமுகவின் பொருளாளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது பொன்முடிக்கு திமுகவில் முக்கிய பதவி இல்லை அமைச்சர் பதிவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என தமிழக முழுவதிலும் குரல் வலுத்து உள்ளது.
பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்ன..!
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று சைவர்-வைஷ்ணவர் மீது அமைச்சர் பொன்முடி ஆபாச பேச்சுக்கள் நகைச்சுவையாக பேசியதற்காக திமுக அரசை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை கடுமையாக சாடியது.
இது தொடர்பாக FIR பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அட்வகேட் ஜெனரலிடம் பல வழக்குகள் பதிவு செய்ய வேண்டாம்.
என்று கேட்டுக் கொண்டது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அந்த கருத்துக்களை தாம் கூறியதை அமைச்சர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
புகாரின் மீது என்ன நடக்கப் போகிறது என்பதற்கு நான் பதில் பெற வேண்டும், பொருள் ஏற்கனவே உள்ளது கருத்து தெரிவித்தவர் பொது மன்னிப்பு கேட்டதால் பிரச்சனைக்கு விசாரணை தேவையில்லை.
தீங்கு விளைவிக்கும் ஆபாச கருத்துக்கள் அந்தப் பேச்சில் உள்ளது,இது தொடர்ந்து செல்ல முடியாது அது எப்போது எரியும் என்று எங்களுக்குத் தெரியாது இது நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட விசாரணையாகும்.
நான் இதில் நுழையும் தருணத்தில், அது வேறு நிறத்தைப் பெறும் அது நான் நடக்க விரும்பவில்லை என்று நீதிபதி தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறக்கூடாது என்றும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆளும் கட்சியாக இருந்தால், என்னால் எதையும் பேச முடியும் அந்த எண்ணம் ஒருபோதும் வரக்கூடாது சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது.
பெரியார் பற்றி மற்ற கட்சியினர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யும்போது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது திமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களையே பற்றி சமூக வலைத்தளங்களில்.
விமர்சித்தால் உடனடியாக திமுக அரசு அந்த நபர்களை கைது செய்கிறது,இப்படி மிக தீவிரமாக இருக்கும் திமுக அரசு திமுக கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் நபர் அமைச்சராக இருப்பவர் இந்துக்கள் பற்றி மிக ஆபாசமாக காதல் கேட்க முடியாத அளவில் பேசியுள்ளார்.
அவர் மீது திமுக அரசு ஏன் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது, நாங்கள் அந்த ஆபாசமான பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டுள்ளோம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் பொன்முடி பொது மேடையில் பேசியது என்ன..!
கடந்த வாரம் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சைவ மற்றும் வைணவ இந்து மதத்திற்கு எதிரான ஆபாசமான கொச்சையான கருத்துக்களை பொது மேடையில் பேசினார்.
தந்தை பெரியார் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் ஒரு பாலுறவுத் தொழிலாளி ஒருவரிடம் நீங்கள் சைவனா அல்லது வைணவனா என்று கேட்கும் ஒரு கதையை விவரித்தார்.
இந்த ஆபாசமான வார்த்தைகளை கேட்டு கூட்டத்திலிருந்து திராவிடக் கழகத்தினர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் இது தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த இந்து மக்களுக்கு எதிராக திரும்பி.
திமுக ஆட்சிக்கு பொறுப்பேற்றது முதல் இந்துக்களுக்கு எதிரான தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறது,குறிப்பாக ஆபாசமான பேச்சு என்பது அதிகமாக இருக்கிறது,கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இது திமுகவுக்கு எதிராக திரும்பும்.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |