TNSTCயில் காலியாக உள்ள 3274 பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்..!Apply immediately for 3274 vacant posts in TNSTC

Apply immediately for 3274 vacant posts in TNSTC

TNSTCயில் காலியாக உள்ள 3274 பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்கவும்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 21ஆம் தேதி வரை மட்டுமே இருப்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் நபர்கள் விண்ணப்பித்து விடுங்கள்.

தமிழகத்தில் 20,000 மேற்பட்ட பேருந்துகள் அரசின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை பேருந்துகள் இயக்கப்படுகிறது இதில் SETC எனப்படும் சொகுசு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்.

தொலைதூர தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது இப்படி தமிழக முழுவதும் 8 போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மூலம் பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகமூலம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,இந்த போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது 3,274 காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இரண்டு பணியிடங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேதி ஏப்ரல் 21ஆம் தேதி இறுதி நாள்,இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் விரைவாக விண்ணப்பித்து விடுங்கள்.

காலிப்பணியிடங்கள் குறித்து முழு விவரம்..!

சென்னை போக்குவரத்துக் கழகம் MTC – 364

மாநில விரைவு போக்குவரத்து கழகம் SETC – 318

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் திருநெல்வேலி – 362

மாநில போக்குவரத்து கழகம் மதுரை – 322

மாநில போக்குவரத்து கழகம் கோவை – 344

மாநில போக்குவரத்து கழகம் சேலம் – 486

மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் – 756

மாநில போக்குவரத்து கழகம் விழுப்புரம் – 322

வயது வரம்பு என்ன

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 24 வயதும் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் இருக்கிறது அதன்படி BC/MBC/DNC/SC/ST பிரிவினர் என்றால் 24 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் தகுதி

இது ஓட்டுநர் நடத்துனர் பணி என்பதால் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 163 சென்டிமீட்டர் உயரம் உடையவராக இருக்க வேண்டும்.

அதேபோன்று குறைந்தபட்சம் 50 கிலோ எடை இருப்பவராக இருக்க வேண்டும்,நல்ல கண் பார்வை பெற்றவராக இருக்க வேண்டும்,உடலில் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் இருக்கும் அவர்கள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி விவரங்கள்

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும்,தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும், 01.01.2025 அன்று தேதியின்படி 18 மாதங்கள் கட்டாயம் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் எவ்வளவு

பொதுப் பிரிவினர் மற்றும்MBC பிரிவினர்களுக்கு 1180 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் SC/ST பிரிவினர் என்றால் 590 ரூபாய் விண்ணப்பம் செலுத்த வேண்டும்.

சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சியால் 2025 ஆண்டு 5 ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம்..!

கடைசி நாள் 21.04.2025 ஆகும்,இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் இருப்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்யாமல் இருக்க நபர்கள் என்ன செய்து விடுங்கள்.

தேர்வு முறை என்ன

எழுத்துத் தேர்வு,திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Official Website Click Here

Official Announcement Click Here

Apply OnlineClick Here

JOIN OUR GROUPS

WHATAPP CLICKHERE
TELEGRAM CLICKHERE

Leave a Comment