5 court orders have come in to put the DMK leadership under pressure
திமுகவின் 5 அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கி கொண்டு உள்ளதால் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
திமுக இப்பொழுது மிகப் பெரிய நெருக்கடியில் இருக்கிறது 5 மிக முக்கியமான அமைச்சர்கள் வழக்குகளில் சிக்கிக் கொண்டு உள்ளார்கள் அவர்களுடைய வழக்குகள் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய பாதிப்பு திமுகவிற்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக தலைமையே நெருக்கடிக்கு உள்ளாக்கு வகையில் 5 நீதிமன்ற உத்தரவுகள் வெளிவந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் பொன்முடி, MRK பன்னீர்செல்வம், துரைமுருகன், செந்தில் பாலாஜி, டாஸ்மார்க் வழக்கு, அமைச்சர் I.பெரியசாமி வழக்குகளில் சிக்கிக் கொண்டார் போன்றவை திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் வழக்கில் சிக்கிக் கொண்ட திமுக
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடியான சோதனைகளை மேற்கொண்டது அதன் பிறகு அமலாக்கத்துறை இதில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது என்ற செய்தியை வெளியிட்டது.
டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்தது முக்கியமாக செந்தில் பாலாஜி அந்த துறைக்கு அமைச்சராக வந்த பிறகு ஊழல் அதிகரித்து உள்ளது என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கரூர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு டாஸ்மார்க் கடையில் பணி செய்யும் ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடைக்கு குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
திடீரென்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விட்டது இந்த சோதனை சட்ட விரோதமானது உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் அமலாக்கத்துறை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சோதனை செய்ய உரிமை இருக்கிறது.
என திமுகவின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திமுக தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு
செந்தில் பாலாஜி வழக்கு என்பது தமிழகத்தில் மிக முக்கிய வழக்காக கருதப்படுகிறது,கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்ற வருகிறது.
இந்த வழக்கை தொடுத்தது திமுக இப்பொழுது செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுவதும் திமுக தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அதன் பிறகு செப்டம்பர் மாதம் ஜாமனில் வெளிவந்தார்.
ஆனால் 48 மணி நேரத்தில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் உடனடியாக இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பதால்.
புலனாய்வு அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டார்கள் சாட்சியங்களை கலைப்பதற்குகு வாய்ப்புகள் இருக்கிறது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தன்னுடைய வாதங்களை முன்வைத்தது இதனை கேட்டு அறிந்த நீதிபதிகள் ஜாமீன் வழங்கியதும் மீண்டும் அதிகாரமிக்க பதவிக்கு வந்துள்ளீர்கள்.
உங்களுக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்று திங்கட்கிழமை ஏதாவது ஏப்ரல் 27ஆம் தேதி தெரிவித்து விடுங்கள் உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்றால் ஜாமினை ரத்து செய்கிறோம்.
என உச்சநீதிமன்றம் தெரிவித்தது திமுகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை திங்கட்கிழமைக்குள் ராஜினாமா செய்வார் என்ற தகவல்களும் கசிந்துள்ளது.
துரைமுருகன்
திமுகவின் மூத்த தலைவர் பொதுச்செயலாளர் துரைமுருகன் 1996 – 2001 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு ஏற்கனவே இருக்கிறது கடந்த 2007 ஆம் ஆண்டு அந்த வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆனால் 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது கடந்த 12 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்.
தற்போது அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்து வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது 2007 முதல் 2009 வரை பல கட்டங்களில் 1.40 கோடிக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக.
தொடரப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது இதுவும் திமுகவிற்கு மிகப்பெரிய அதிர்வலியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடியின் சர்ச்சை ஆபாசமான பேச்சு
அமைச்சர் பொன்முடி திராவிட கழகத்தினர் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு இந்து மதத்தை பற்றி மிகவும் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினார் சைவம் மற்றும் வைணவம் குறித்து அவருடைய ஆபாச பேச்சு என்பது கடும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.
இதனால் திமுக அவருடைய கட்சியின் பதவியை பறித்தது திமுகவின் மகளிர் அணி தலைவராக இருக்கும் கனிமொழி இந்த பேச்சுக்கே கண்டனம் தெரிவித்தார் பொன் முடியும் இது குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் இவர் மீது வழக்கு பதியவில்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது நீதிமன்றமும் காவல்துறையிடம் இது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தது ஏன் வழக்கு பதியவில்லை என தெரிவித்தது.
நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது,இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது தொடர்ந்து இது போன்ற ஆபாச பேச்சுக்கள் என்பது.
இந்து மதத்திற்கு எதிராக இருக்கிறது அதுவும் திமுகவில் முக்கிய தலைவர்கள்தான் இந்து மதத்தை ஆபாசமாக சித்தரிக்கிறார்கள் என நீதிமன்றம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகள் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்
இப்படி திமுகவில் முக்கியமான அமைச்சர்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான வழக்கு என்பது திமுகவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது இப்பொழுது அதிமுக பாஜக கூட்டணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் வழக்கு விசாரணை தீவிர படுத்தினால் வெற்றி வாய்ப்பை தங்கள் பக்கம் திருப்பலாம் என அதிமுக பாஜகவிற்கு தன்னுடைய அழுத்தத்தை தெரிவித்துள்ளது பாஜகவும் திமுக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தொல்லை கொடுத்து வருகிறது.
இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் 2029 ஆம் ஆண்டு நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் தமிழகத்திலிருந்து குறைந்த 20 எம்பிக்கள் வேண்டுமென உறுதியுடன் இருக்கிறது இதனால் இனிவரும் காலங்களில்.
ஒவ்வொரு மாதமும் இந்த பிரபஞ்சத்தில் சில முக்கியமான கிரக மாற்றங்கள் ஏற்படுகின்றன..!
திமுகவின் ஊழல் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவரும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா செய்வது என்பது உறுதியாகிவிட்டது.
இப்பொழுது சட்டசபை நடந்து வரும் நிலையில் அமைச்சர் பதிவையே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது திமுகவிற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |