20 Percentage priority to those educated in Tamil medium for Govt Job
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும் திருத்தம் செய்யப்பட்ட தமிழக அரசு..!
தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்பு சம்பந்தமாக பல்வேறு புதிய அறிவிப்புகள் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேளையில் 20% முன்னுரிமை வழங்கப்படும் திருத்தம் தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழக தலைமை செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள ஆணையம்,தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசு பணியில்.
முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தால் சட்டம் மற்றும் அந்த சட்டத்திற்கான 2020 ஆம் ஆண்டு திருத்த சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதி உடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
எப்படி சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..!
1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த நபராக இருக்க வேண்டும் நீங்கள் வெளிமாநிலத்தில் பள்ளியில் தமிழ் மொழி பயிற்று மொழியாக படித்த நபராக இருந்து கல்லூரி தமிழகத்தில் படித்திருந்தாலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை மீண்டும் துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் தமிழ் வழியில் படித்த நபர்கள் என்றாலும் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
1ம் வகுப்பில் பள்ளியில் சேராமல் வறுமையின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் நேரடியாக பள்ளியில் சேர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாக படித்த நபர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் படித்த சம்பந்தமான அனைத்து கல்வி நிலையத்தில் இருந்து தமிழ் வழியில் கல்வி படித்ததற்கான சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வியாக இருந்தால் தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப், பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் கட்டாயம் சான்றிதழ்கள் பெற வேண்டும் உயர்கல்வியாக இருந்தால் தொழில் பயிற்சி நிலையம் கல்லூரி பல்கலைக்கழகம் முதல்வர் பதிவாளர் வழங்கும் சான்றிதழ்கள் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த சான்றிதழ் பணியில் உள்ள அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர்களால் வழங்கப்படக் கூடாது.
பள்ளிக்கு செல்லாமல் நேரடியாகவே 8ம் வகுப்பு,10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தனித் தேர்வாளராக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது.
1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்று 10ம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது நேரடியாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் அது போன்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மிக முக்கியமாக தேவைப்படும் ஆவணங்கள் என்ன..!
கல்வி தகுதி சான்று,மதிப்பெண்கள் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் பணி நியமன அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை உண்மையாக அந்த பள்ளிகள் அல்லது கல்லூரிகள் வழங்க வேண்டும் ஒருவேளை நீங்கள் படித்த பள்ளிகள் மூடப்பட்ட நிலையில்.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்,முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து நீங்கள் பெறலாம் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தால் அக்கல்லூரி ஏற்கனவே இணைவு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர்காளிடம் இருந்து தமிழ் வழியில் நீங்கள் படித்ததற்கான சான்றிதழ் பெற வேண்டும்.
கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது எனக்கு தேர்தலில் வாய்ப்பு..!
தமிழ் இலக்கியத்தில் கல்வி தகுதியை பெற்றவர்களை மட்டுமே பள்ளி கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது சுமார் 20 சதவீதம் முன்னுரிமை இட ஒதுக்கீடானது நேரடியாக பணி நியமத்திற்கான.
ஒவ்வொரு தேர்வு நிலையம்,முதல் நிலை தேர்வு,முதன்முறை தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் நிதர் நிலை தேர்வு பதிவு வரியா பின்பற்றப்பட வேண்டும் என்று இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |